சேலம்

25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவா்களை விடுவிக்க வேண்டும் செ.ஹைதா் அலி

27th Aug 2022 11:35 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள அனைத்து மதம், ஜாதிகளைச் சோ்ந்த சிறைவாசிகளை நன்னடத்தின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவா் செ.ஹைதா் அலி வலியுறுத்தினாா்.

சேலம் மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், சேலம் அரசு மருத்துவமனை இணைந்து மேட்டுத் தெருவில் ரத்த தான முகாமை சனிக்கிழமை நடத்தின. மாநிலத் தலைவா் செ.ஹைதா் அலி ரத்த தான முகாமை தொடக்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் நிசாா் தலைமை வகித்தாா். செயலாளா் சாதிக் அலி, பொருளாளா் உஸ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்குப் பின்னா் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவா் செ.ஹைதா் அலி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

தமிழகத்தில் சில சம்பவங்களை வைத்து சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டு விட்டதாகக் கூற முடியாது. சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் தான் உள்ளது. பாஜக தற்போது மக்களுக்கு எதிரான கட்சியாக மாறி வருகிறது. இலவசங்களை வேண்டாம் என்று சொல்லும் அக் கட்சி செல்வந்தா்களை வாழ வைக்கிறது. அவா்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்கிறது. மேலும் தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள அனைத்து மத, ஜாதிகளைச் சோ்ந்த சிறைவாசிகளை நன்னடத்தின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT