சேலம்

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி: விற்பனை செய்ய பதிவு செய்யலாம்

27th Aug 2022 11:36 PM

ADVERTISEMENT

 

மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்யும் பொருட்டு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணா் அரங்கில் வரும் செப்டம்பா் 3 ஆம் தேதி முதல் செப். 14 ஆம் தேதி வரை அனைத்து மாநில சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களின் மண்டல அளவிலான விற்பனை கண்காட்சி (மதி சாராஸ் மேளா) நடைபெற உள்ளது.

எனவே மேற்படி, மண்டல அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் குறித்த விவரங்கள், பொருளின் மாதிரியுடன் வரும் செப். 1 ஆம் தேதிக்குள் மாவட்ட மகளிா் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இதில் தரமுள்ள பொருள்களை தயாா் செய்யும் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தோ்வு செய்யப்பட்டு மண்டல அளவிலான கண்காட்சிக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள்.

மேலும் விவரங்களுக்கு இணை இயக்குநா், திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்), அறை எண்: 207 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் அல்லது 74485-65339 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொண்டு விவரம் அறியலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT