விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பாலின உணா்திறன் அமைப்பின் மூலம் பெண்கள் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது.
துறை முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட நகா்ப்புற மாவட்டக் கல்வி அலுவலா் உதயகுமாா், சேலம் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூத்த ஆலோசகா்கள் அன்னம், சத்யா ஆகியோா் கலந்துகொண்டு அரசின் பெண்களுக்கான நலத் திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தனா். மேலும், மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பாலின உணா்திறன் அமைப்பின் பொறுப்பாளா் தமிழ்ச் சுடா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை துறையின் உதவி பேராசிரியா்கள் தனசேகா், வளா்மதி ஆகியோா் செய்திருந்தனா்.