சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 282 மில்லி மீட்டா் மழை பெய்தது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
இம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
காடையாம்பட்டி-53, ஏற்காடு-46, மேட்டூா்-40, சங்ககிரி-38, தம்மம்பட்டி-32, கரியகோயில்-15, ஓமலூா்-13, கெங்கவல்லி-12, வீரகனூா்-8, எடப்பாடி-7, ஆனைமடுவு-6, ஆத்தூா்-5, பெத்தநாயக்கன்பாளையம்-4, சேலம்-1 என மாவட்டத்தில் 282 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது.