சேலம்

கொங்கணாபுரத்தில் ரூ. 1.20 கோடிக்கு பருத்தி விற்பனை

27th Aug 2022 11:33 PM

ADVERTISEMENT

 

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1.20 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த 4,000 பருத்தி மூட்டைகள் 1,050 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டுறவுத் துறை அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது.

இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 9,560 முதல் ரூ. 11,269 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ. 8,800 முதல் ரூ. 10,899 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ. 4,550 முதல் அதிகபட்சமாக ரூ. 7,120 வரையிலும் விற்பனையாயின. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 1.20 கோடிக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது. இம் மையத்தில் வரும் 3ஆம் தேதி பருத்திக்கான பொது ஏலம் நடைபெறும் என சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT