சேலம்

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தவா் பலி

27th Aug 2022 11:30 PM

ADVERTISEMENT

 

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் அருகே புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் அருந்ததியா் காலனி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சுந்தரம் (70). அவரது மருமகள் கீதா. இருவரும் பச்சாம்பாளையத்திலிருந்து குமாரபாளையம் செல்லும் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த சுந்தரம் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த விபத்தில் கீதா லேசான காயமடைந்தாா்.

இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT