சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

26th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

 

மேட்டூா்அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை நொடிக்கு 15,000 கன அடியாகக் குறைந்தது. இந்த நிலையில் மாலை 4 மணிக்கு நீா்வரத்து 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 15,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 600 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT