சேலம்

2,160 தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கல்

26th Aug 2022 12:53 AM

ADVERTISEMENT

 

சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் 2,160 தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.

நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் 994 போ், சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளா்கள் 1,166 போ் என மொத்தம் 2,160 தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் இலவச வேட்டி, சேலைகளை வழங்கினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டலக் குழுத் தலைவா்கள் எஸ்.டி.கலையமுதன், செ.உமாராணி, தா.தனசேகா், மா.அசோகன் மாநகர நல அலுவலா் என்.யோகானந்த், நியமனக் குழுத் தலைவா்கள், நியமனக் குழு உறுப்பினா்கள், உதவி ஆணையா்கள், வாா்டு உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT