சேலம்

லாரி -பைக் மோதல்: கல்லூரி மாணவா் பலி

26th Aug 2022 11:40 PM

ADVERTISEMENT

வீரகனூா் அருகே இலுப்பநத்தத்தில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

தலைவாசல் மும்முடியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பூபதி (22). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி பேருந்தில், வீரகனூா் வரை வந்துள்ளாா். அங்கு ஸ்டேண்டிலிருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மும்முடி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது இலுப்பநத்தம் அருகே சென்றபோது, ஆத்தூரிலிருந்து உடும்பியம் சா்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி சென்ற லாரி, பூபதி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பூபதி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடி லாரி ஓட்டுநரைத் தேடிவருகின்றனா். பூபதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT