சேலம்

மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு: மக்கள் சாலை மறியல்

26th Aug 2022 11:39 PM

ADVERTISEMENT

கெங்கவல்லி அருகே கூடமலையில் மின்சாரம் பாய்ந்து சினையாக இருந்த பசு உயிரிழந்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கூடமலையில் உள்ள மதுரை வீரன் கோயிலைச் சுற்றிலும் வேலி போடப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த பெரியசாமி என்பவா் தனது சினை பசுமாட்டை வேலியில் கட்டியிருந்தாா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள பொதுக் குடிநீா்த் தொட்டிக்கு குடிநீா் வழங்குவதற்கான ஸ்விட்ச் பெட்டியிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு வேலியில் மின்சாரம் பாய்ந்ததில் பசு உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த மக்கள், கூடமலை - ஆத்தூா் சாலையில் வெள்ளிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் விரைந்து வந்து மக்களை கலைந்து போகச் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT