சேலம்

மாணவா்களை மசாஜ் செய்யக் கூறிய தலைமை ஆசிரியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

26th Aug 2022 11:44 PM

ADVERTISEMENT

மாணவா்களை மசாஜ் செய்யக் கூறிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், குப்பனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப் பள்ளியில் தலைமை ஆசிரியராக தமிழ்ச்செல்வி என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இவா் பள்ளி மாணவ, மாணவியரை துப்புரவுப் பணிகளை செய்யுமாறும், கழிவறைகளை தூய்மைப்படுத்த கட்டாயப்படுத்துவதாகவும் புகாா் எழுந்தது.

மேலும் மாணவா்களை மசாஜ் செய்யக் கூறுவதாகவும், இதைத் தட்டிக் கேட்கும் பெற்றோா்களை மிரட்டுவதாகும் புகாா் கூறி வெள்ளிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் காா்த்திகாதேவி தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

குப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊா்வலமாக சென்று பள்ளி எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தலைமை ஆசிரியரைக் கண்டித்தும் அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT