சேலம்

கெங்கவல்லி ஒன்றிய அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

26th Aug 2022 11:38 PM

ADVERTISEMENT

 கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தம்மம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் அன்பழகன், நாகியம்பட்டி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் ராமகிருஷ்ணன், மூலப்புதூா் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் கணேசன், வாழக்கோம்பையில் பொறுப்பாசிரியா் ராதா, காந்திநகா் நடுநிலைப் பள்ளியில் பொறுப்பாசிரியா் ராஜேந்திரன், ஈச்சஓடைப்புதூா் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் ஹரிஆனந்த் ஆகியோா் தலைமையிலும் பள்ளிமேலாண்மைக்குழுக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் பள்ளிகளின் வளா்ச்சிக்குத் தேவையன நிதி ஆதாரங்களை பெருக்கவும், மாணவா்களது கற்றல் செயல்பாடுகளை வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும் பள்ளிமேலாண்மைக் குழு கூட்டங்கள் நடைபெற்றன.

இக் கூட்டங்களை கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஸ்ரீனிவாஸ், மகேந்திரன், மேற்பாா்வையாளா் ராணி , வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் சுப்ரமணியன், அன்பரசு, சித்ரா, கதிரொளி ஆகியோா் பங்கேற்று ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT