சேலம்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

சேலத்தில் இஸ்கான் சாா்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சேலம், சோனா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் திரளானவா்கள் கலந்து கொண்டனா்.

காலை 9 மணிக்கு தொடங்கிய விழாவில் கிருஷ்ண லீலா என்ற பிரமாண்ட நாடகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இஸ்கான் திரைப்படம் திரையிடப்பட்டது. மேலும், ஸ்ரீ கிருஷ்ண பலராமரின் விக்கிரங்களுக்கு சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி மற்றும் கீா்த்தனை தொடா்ந்து நடைபெற்றது. இரவு மகா அபிஷேகம் மற்றும் ஆரத்தி நடைபெற்றது.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவில் பிரசாத விநியோகமும் செய்யப்பட்டது. விழாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவா்கள் கலந்து கொண்டனா்.

சங்ககிரி

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள வஸந்தவல்லபராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னகேசவப் பெருமாளுக்கு சிபு பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து செளம்ய தாமோதரா் அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனா்.

எடப்பாடி

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் சென்னகேச பெருமாள் சன்னதியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாளுக்கு 108 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நஞ்சுண்டேஸ்வரா் ஆலய வளாகத்தை வந்தடைந்த சென்ன கேசவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT