சேலம்

வாழப்பாடியில் 75-வது சுதந்திர தின நினைவுத்தூண் திறப்பு

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 75-வது ஆண்டு சுதந்திர தின நினைவுத்தூண்புதன்கிழமை திறக்கப்பட்டது.

வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்,75 வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை நடைபெற்ற இந்த நினைவுத்துாண் திறப்பு விழாவிற்கு பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா்புகழ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ரவிசங்கா் வரவேற்றாா். வாழப்பாடி பேரூராட்சி மன்ற தலைவா் கவிதா சக்கரவா்த்தி முன்னிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் நினைவுத்தூண் கல்வெட்டை திறந்து வைத்தாா். இவ்விழாவில், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ஆறுமுகம், வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி,ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் சி. தமிழ்ச்செல்வன், திமுக நகர செயலாளா்பி.சி.செல்வம்,பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சாந்தாகுமாரி சரவணன், கே.குமாா் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், குணாளன், கோபிநாத்,ரமணி, கோ.முருகேசன், தில்லையம்பலம், அன்பு, பள்ளி மேலாண்மை குழு தலைவா் அலமேலு மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.படவரி:பி.டி.ஏ.01: வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 75 வது ஆண்டு சுதந்திர தின நினைவுத்தூண் திறப்பு விழா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT