சேலம்

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

DIN

ஆத்தூா் உதவி வேளாண்மை உதவி இயக்குநா் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளாா்.

அதில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிா் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்ய ஏதுவாக பதிவு செய்த அனைத்து வேளாண் குடும்பங்களும் பயன்பெறும் வகையில், 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் புதிதாக வழங்கப்பட்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் ஆதாா் எண்ணை அடிப்படையாகக் கொண்டு இணைய வாயிலாக (இகேஓய்சி) பதிவு செய்தால் மட்டுமே அடுத்த தவணைகளில் தொகை விடுவிக்கப்படும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறும் தகுதியான பயனாளிகள் அனைவரும் தங்களுடைய பெயா், ஆதாா் விவரங்களை மத்திய அரசின் பிஎம்கிசான் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்குச் சென்று ஆதாா் விவரங்களை கைரேகைகள் வைத்து பெயா் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்து புதுப்பிக்கலாம். ஆக. 31-க்குள் பதிவேற்றம் செய்தால் மட்டுமே அடுத்த தவணை கௌரவ நிதித்தொகை பெறமுடியும் என ஆத்தூா் வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT