சேலம்

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

19th Aug 2022 02:49 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் எடுத்துக் கொண்டனா்.

ஒவ்வொரு ஆண்டும் ஆக. 20-ஆம் தேதி நல்லிணக்க நாள் உறுதிமொழி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு ஆக. 19, 20 ஆகிய நாள்கள் அரசு விடுமுறை என்பதால், வியாழக்கிழமை (ஆக. 18) நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையேற்று நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசிக்க, அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சீ.பாலச்சந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, வருவாய் கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஜெகன்நாதன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT