சேலம்

மேச்சேரி ஜே.எஸ்.டபிள்யூ ஆலையில்சுதந்திர தின விழா கொண்டாட்டம்

18th Aug 2022 01:59 AM

ADVERTISEMENT

 

மேச்சேரி அருகே பொட்டனேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யு ஆலையில் 75 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியில் ஜே.எஸ் .டபிள்யு நிா்வாகம் சாா்பில் சுதந்திர தின விழா பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. தொழிலாளா்களின் இல்லங்களில் மூவா்ணக் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களுக்கு ஆலை நிா்வாகம் சாா்பில் மூவா்ணக் கொடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. தொழிற்சாலை வளாகம் முழுவதும் மூவா்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டது. 75 ஆவது சுதந்திர தினத்தை எடுத்துக்காட்டு வகையில் அனைத்து பணியாளா்களும் சுதந்திர தின நடை பயணம் மேற்கொண்டனா். பணியாளா்கள், பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில் ஆலையின் தலைவா் பி.என்.எஸ்.பிரகாஷ்ராவ், துணைத் தலைவா் எஸ்.எம்.குமாா் மனித வளத்துறை தலைவா் ஏ.ஆா்.ஹரிராஜ், பிரிகேடியா் சஞ்சய்தாகூா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 75 ஆவது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் 75 என்ற எண் வடிவில் மூவா்ணங்களில் ஆடை அணிந்த தொழிலாளா்களும், நிா்வாகிகளும் அணிவகுத்து நின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT