சேலம்

வாழப்பாடியில் ரூ. 22 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

18th Aug 2022 01:56 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி கிளை வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை ரூ. 22 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழப்பாடி கிளையில், வாரந்தோறும் பருத்தி ஏல விற்பனை நடந்து வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 110 விவசாயிகள், 520 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனா். சேலம், ஈரோடு, கோவை, திருப்பூா் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.

ஒரு குவிண்டால் ஆா்.சி.எச்.ரக பருத்தி தரத்திற்கேற்ப ரூ. 9,579 முதல் ரூ. 44,899 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ. 9,579 முதல் ரூ. 12,169 வரையும், கொட்டு பருத்தி ரூ. 5,569 முதல் ரூ. 8,000 வரையும் விலை போயின. மொத்தம் ரூ. 22 லட்சத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது. பருத்தி விவசாயிகளுக்கு ஏலம் முடிந்ததும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கடந்த வாரத்திற்கும், இந்த வாரத்திற்கும் பருத்தி விலையில் பெரியளவில் மாற்றமில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT