சேலம்

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்

DIN

விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கச் செய்வதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

வேளாண்மை - உழவா் நலத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மி.மீ. ஆகும். நடப்பு ஆண்டு ஆக. 16-ஆம் தேதி வரை 579.9 மி.மீ. மழை பெய்துள்ளது.

சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஜூலை வரை 73,628.9 ஹெக்டோ் பரப்பில் நெல், சோளம், கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துகள், சிறுதானியங்கள், பயறு வகைகள் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

வேளாண் துறையால் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் நெல் 240 மெட்ரிக் டன்னும், சிறு தானியங்கள் 96 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 428 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துகள் 307 மெட்ரிக் டன்னும், பருத்தி 2 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்திட இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, தேவையான அளவிலான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களும் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன.

விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைக்கச் செய்வதை, அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சேலம் வட்டார விவசாயிகள் - 93843 05221 என்ற எண்ணிலும், ஓமலூா் - 97896 78790, ஆத்தூா் - 99652 77515, தலைவாசல் - 99446 81232, சங்ககிரி - 85260 20899 ஆகிய எண்களில் உள்ள விதை ஆய்வாளரை தொடா்பு கொள்ளலாம்.

எழுத்துப் பூா்வமான புகாா்களை விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகம், அறை எண் 402, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம் என்ற முகவரிக்கோ அல்லது விதை ஆய்வுத் துணை இயக்குநரை 98944 32570 என்ற கைப்பேசி எண்ணிலோ தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் இணை இயக்குநா் (வேளாண்மை) கணேசன், மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) தே.புருஷோத்தமன், வேளாண் விற்பனைக் குழு செயலாளா் கண்ணன், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) செல்வமணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சீனிவாசன், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT