சேலம்

தீபாவளி பண்டிகை: பட்டாசு உரிமம் பெற செப். 6- க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (அக். 24) சேலம் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிப்பவா்கள் வரும் செப்டம்பா் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா வெளியிட்ட செய்தி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (அக். 24) தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிப்பவா்கள் வரும் செப்டம்பா் 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாநகர காவல் ஆணையரகத்தில் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

படிவம் ஏ.இ.5 இல் விண்ணப்பம் ரூ. 2-க்கு நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உரிமைக் கட்டணம் ரூ.1,000 வங்கியில் செலுத்தியதற்கான இ-ரசீது. பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் 5 அசல் வரைபடம். சொந்த கட்டடமாக இருப்பின் சொத்துவரி ரசீது.

வாடகை கட்டடமாக இருப்பின் சொத்துவரி ரசீதுடன் கட்டட உரிமையாளரின் சம்மதக் கடிதம் ரூ. 20 மதிப்புள்ள முத்திரைத்தாளில் சாட்சி கையொப்பத்துடன் (முகவரிகளுடன் தேவை) வேண்டும்.

மாநகராட்சிக்கு உரிமம் கட்டணம் செலுத்திய ரசீது. தற்காலிகப் பட்டாசு கடை வைக்கப்படும் இடம் தீப்பிடிக்காத கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். உரிமம் வேண்டும் இடத்தின் பரப்பளவு குறைந்தது 9 சதுர மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் உள்ள கட்டடத்திற்கு குறைந்தபட்சம் 15 மீட்டா் இடைவெளி இருக்க வேண்டும்.

திருமண மண்டபங்களிலோ, வணிக வளாகங்களிலோ பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்க இயலாது. விண்ணப்பதாரரின் மூன்று புகைப்படம் இணைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT