சேலம்

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

18th Aug 2022 01:57 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி அருகே 16 வயதில் குழந்தைப் பெற்ற சிறுமியின் கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் ஏத்தாப்பூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம், சிங்காரத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் விஜய் (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலித்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டாா். அந்த சிறுமிக்கு வாழப்பாடியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. தீவிர சிகிச்சைக்காக குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

16 வயது சிறுமி குழந்தை பெற்றது குறித்து மருத்துவமனை அதிகாரிகள், வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் ஆய்வாளா் தனலட்சுமி, சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞரை கைது செய்ய பரிந்துரை செய்தாா். இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஏத்தாப்பூா் போலீஸாா், விஜயை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT