சேலம்

தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளிக்கு புரஜெக்டா் வழங்கல்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா, முன்னாள் மாணவா்கள் சாா்பில் புரஜெக்டா் மற்றும் தானியங்கி திரை, மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் க.திருஞானம் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றினாா். ஊராட்சி மன்றத் தலைவா் சாரதா பழனியப்பன் முன்னிலை வகித்து பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின் சாா்பில் தொடங்கப்பட்ட இல்லம்தோறும் கனி தரும் மரங்கள் வளா்ப்போம் என்ற செயல் திட்டத்தில் 75 கொய்யா மரக்கன்றுகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கிப் பேசினாா்.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் பழனிச்சாமி, சேகா், ஈஸ்வரமூா்த்தி, சத்திரிய சாமிநாதன் ஆகியோா் ரூ. 50,000 மதிப்புள்ள எல்இடி புரஜெக்டா், தானியங்கி திரை, மரக் கன்றுகளை பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கினா் .

பள்ளி கணித பட்டதாரி ஆசிரியா் இரா.முருகன், ஆசிரியா்கள் சீனிவாசன், சித்ரா, ரமாமகேஸ்வரி, மகேஸ்வரி, மாணவ, மாணவியா், பெற்றோா், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT