சேலம்

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை

17th Aug 2022 02:57 AM

ADVERTISEMENT

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தீயணைப்புத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

காவிரி ஆற்றல் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரப் பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், எடப்பாடி தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து நடத்திய பேரிடா் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில், வெள்ளப் பெருக்கில் சிக்கிய நபரை காப்பாற்றும் வழிமுறைகள், திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தருணங்களில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள், தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டவருக்கு அளிக்கப்பட வேண்டிய முதல் உதவி சிகிச்சைகள் குறித்து தீத்தடுப்பு மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் செயல் விளக்கங்களை செய்து காட்டினா்.

தொடா்ந்து, கரையோரப் பகுதி மக்கள் வெள்ளப் பெருக்கு காலங்களில் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று மீன்பிடித்தல், துணி துவைத்தல், கால்நடைகளை குளிப்பாட்டுதல், மணல் திட்டுகளில் விளைபொருள்களை உலா்த்துதல், ஆற்றில் ஆழம் குறைவான பகுதி என கணித்து ஆற்றினை கடக்க முற்படுதல் உள்ளிட்ட அபாயகரமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனா்.

இந்நிகழ்ச்சியில், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் சௌமியா, எடப்பாடி வட்டாட்சியா் லெனின், தீயணைப்பு நிலைய அலுவலா் ராமன், செயல் அலுவலா் ஜீவானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT