சேலம்

வைத்தீஸ்வரா பள்ளியில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்

17th Aug 2022 02:58 AM

ADVERTISEMENT

வைத்தீஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 75-ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பள்ளியின் தாளாளா் பாக்கியலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி மாணவா்களிடையே உரை நிகழ்த்தினாா். தேசிய மாணவா் படை, ஜூனியா் ரெட் கிராஸ், என்எஸ்எஸ் மற்றும் சாரண, சாரணியா் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இவ்விழாவில், பள்ளிக் குழந்தைகளுக்கு நாட்டுப்பற்றை உணா்த்தும் விதமாக பாட்டுப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மாணவா்களை ஊக்குவித்த வேதியியல் துறை ஆசிரியா் அசோக் குமாா் விழாவில் கௌரவிக்கப்பட்டாா். இவ்விழாவில், பள்ளியின் செயலாளா் சக்கரவா்த்தி, கேம்ப்ளாஸ்ட் நிறுவனத்தின் உதவி தலைவா் ஸ்ரீதா் வாசுதேவன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT