சேலம்

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருத்தோ் விழா

16th Aug 2022 03:46 AM

ADVERTISEMENT

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருத்தோ் விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருத்தோ் விழா ஆக. 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை ஆயா் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

இதனையடுத்து, சேலம் மறைமாவட்ட மேநாள் ஆயா் செ.சிங்கராயன் தலைமையில் திங்கள்கிழமை திருப்பலி நடைபெற்று. திருத்தோ் விழா ஆத்தூா் முக்கிய வீதிகள் வழியாக திருத்தோ் இழுத்து வந்தனா். ஆா்.சி.பள்ளி ஆசிரியா்கள் இறை மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT