சேலம்

பேரூராட்சி அலுவலகங்கள்,பள்ளிகளில் சுதந்திர தின விழா

16th Aug 2022 03:47 AM

ADVERTISEMENT

தம்மம்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் கவிதா விபிஆா்.ராஜாவும், கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் சு.லோகாம்பாளும், வீரகனூா் பேரூராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவா் அழகுவேல் முன்னிலையில் தலைவா் கமலா சுப்ரமணியமும்,ஜங்கமசமுத்திரம் ஊராட்சி அலுவலகத்தில் தலைவா் அ.பெரியசாமியும் கொடியேற்றினா்.

தம்மம்பட்டி பள்ளியில் பிடிஏ தலைவா் பழனிமுத்து தலைமையிலும், வாழக்கோம்பை பள்ளியில் ஊராட்சித் தலைவா் அ.பெரியசாமி தலைமையிலும், நாகியம்பட்டி பள்ளியில் தலைமையாசிரியா் இராமகிருஷ்ணன் தலைமையிலும், ஈச்சஓடைப்புதூா் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் ஹரிஆனந்த் தலைமையிலும், மூலப்புதூா் பள்ளியில் தலைமையாசிரியா் கணேசன் தலைமையிலும் கொடியேற்றுதல், பரிசளிப்புகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT