சேலம்

எடப்பாடி அருகே சுதந்திர நாளில் மது விற்பனை: பொதுமக்கள் வேதனை

15th Aug 2022 10:19 AM

ADVERTISEMENT

எடப்பாடி: நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு சுதந்திர நாளில் அனைத்து அரசு மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளது. 

இந்நிலையில் எடப்பாடி பகுதியில் உள்ள பல்வேறு மதுபானக் கடைகளில் இன்று (திங்கள்) அதிகாலை முதலே மறைமுக மது விற்பனை  நடைபெற்று வருகின்றன. குறிப்பாக எடப்பாடி நகராட்சி பகுதியில் பூலாம்பட்டி பிரதான சாலையில் அமைந்துள்ள மதுக்கடையில்  பாதி கதவு திறந்த நிலையில் தொடர்ந்து மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதேபோல் வெள்ளரி வெள்ளி அருகே உள்ள மதுபான கடையின் பின்புறம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து, மதுபான பாட்டில்கள்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில குடிமகன்கள் சட்டையில் தேசியக் கொடியை அணிந்து வந்து மதுக் குடித்து சென்ற வேதனைக்குரிய காட்சிகளும் அங்கு அரங்கேறியுள்ளது. 

நாட்டின் சுதந்திர நாள் என்றும் பாராமல், அரசின் அறிவிப்பினை காற்றில் பறக்க விட்டு கூடுதல் விலைக்கு அப்பகுதியில் மதுபானம் விற்பனை நடைபெறுவதை சம்பந்தப்பட்ட காவல்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளாக அமைந்துள்ளது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT