சேலம்

சங்ககிரியில் ரத்த தானம் முகாம்

15th Aug 2022 03:27 PM

ADVERTISEMENT

சங்ககிரி: சுதந்திர நாள் விழாவையொட்டி சங்ககிரி வி.என்.பாளையம் யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப்,  வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார மையம்  மற்றும் சேலம் அரசு மருத்துவமனை ஆகியவைகள் இணைந்து நடத்தும் 24வது ரத்த தான முகாம் சங்ககிரி வி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில்  திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

திமுக சேலம் மேற்கு மாவட்ட செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி, மருத்துவர் எ.ஜெகநாதன், மாநில லாரி உரிமையாளர்கள் சம்ளேனத்தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் என்.கந்தசாமி ஆகியோர்  முகாமினை தொடக்கி வைத்தனர்.

சங்ககரி பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் கே.சண்முகம், முன்னாள் கவுன்சிலர் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன், வடுகப்பட்டி மருத்துவ அலுவலர் அமுதராணி ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்தம் பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இம்முகாமில் யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள், ரோட்டரி கிளப், இன்னர்வீல் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது நல அமைப்புகளைச் சேர்ந்த 125 பேர் ரத்த தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். ரத்தம் தானம் பெறும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் என்.மோகன்குமார், பொருளாளர் எஸ்.ஆர்.செங்கோட்டுவேல்,  துணைத்தலைவர் எம்.சின்னதம்பி, இணைச்செயலர் கே.முருகேசன், நிர்வாக குழு உறுப்பினர்கள், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் கேபிஆர். செல்வராஜ்,  முன்னாள் செயலர் கே.கே.நடேசன், யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT