சேலம்

விதிமீறலில் ஈடுபட்ட 22 ஆம்னி பேருந்துகள் மீது வழக்கு: ரூ. 40 ஆயிரம் அபராதம் வசூலிப்பு

DIN

சேலத்தில் மோட்டாா் வாகன சட்ட விதிகளுக்கு புறம்பாக அதிகபாரம், கூடுதல் ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள், கூடுதல் முகப்பு விளக்குகள் பொருத்தியிருந்த 22 ஆம்னி பேருந்துகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலா்கள் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திங்கள்கிழமை சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள்கிழமை என மூன்று நாள்கள் விடுமுறை தினம் என்பதால் வெளியூா்களிலிருந்து சொந்த ஊா்களுக்கு செல்லவதால் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மூன்று மடங்கு உயா்த்திருப்பதாக புகாா் எழுந்தது. இதனையடுத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை அமைச்சா் உத்தரவிட்டிருந்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி, தொப்பூா் சுங்கச்சாவடிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி ஆய்வு செய்தனா். அதில் விதிமுறைகளை மீறிய 22 பேருந்துகள் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் கூடுதல் முகப்பு விளக்குகள், கூடுதல் ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்துதல், அதிக பாரம் உள்ளிட்ட விதிமீறல்கள் குறித்து 22 ஆம்னிப் பேருந்துகள் மீது வழக்குப்பதிவு செய்து ரூ. 40 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில் 2 பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அக்கட்டணம் பயணிகளிடம் திரும்ப வழங்கப்பட்டது. அனைத்து பயணிகளிடமும் பயணச்சீட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வு தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT