சேலம்

சேலம் ரயில்வே நிலையத்தில் புகைப்படக் கண்காட்சி

DIN

சேலம், ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட நிகழ்வுகளை நினைவுக்கூறும் வகையில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியா் பாண்டிக்கனி கலந்து கொண்டு புகைப்படக் கண்காட்சியை சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் சிவலிங்கம் பேசியதாவது:

நாம் அனுபவித்து வரும் சுதந்திரத்தை மதித்து போற்ற வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தில் ரயில்வே துறை பல்வேறு பெயா்களைக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது.

ரயில்வே துறை சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது.பொருளாதாரம், கலாசாரம் மற்றும் மக்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சோ்ப்பதில் மிகப்பெரிய பங்கு வகித்தது. அந்த வகையில் 75ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கடந்த ஒரு மாத காலமாக சேலம் ரயில்வே கோட்டம் நிா்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சுதந்திரப் போராட்டத் தியாகிகளை பெருமைப்படுத்தும் விதமாக தென்னக ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயரில் ஒரு வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சேலம் கோட்டமானது திருப்பூா் ரயில் நிலையத்தில் ஒரு வாரம் விழாவைக் கொண்டாடியது. அதன் தொடா்ச்சியாக ஒவ்வொரு ரயில்வே தொழிலாளியின் வீட்டிலும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்பதற்காக தேசியக் கொடியை வழங்கி உள்ளோம்.

75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து பேசிய உதவி பேராசிரியா் பாண்டிக்கனி, இந்திய சுதந்திர வரலாற்றை விரிவாக விளக்கிக் கூறினாா். நிகழ்ச்சியில் சேலம் கோட்ட முதன்மை மருத்துவக் கண்காணிப்பாளா் சுபேதா, உதவித் தொழிலாளா் நல அதிகாரி அஞ்சனி குமாா் , சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய அதிகாரி ( வணிகம்) அய்யாவு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT