சேலம்

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

14th Aug 2022 11:56 PM

ADVERTISEMENT

 

75ஆவது சுதந்திர தினத்தையொட்டி சேலம், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க சேலம் ரயில்வே போலீஸாரும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்தனா்.

ரயில் நிலையத்தில் நடை மேடைகள், பாா்சல்கள் அனுப்பும் பிரிவு பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது. சேலம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தனா். போலீஸ் மோப்பநாய்களான லூனா, ஆகாஷ் வெடிப்பொருள்கள் உள்ளதா என்றும் சோதனை செய்தன.

சேலம், ஜங்ஷன் ரயில்நிலைய டிஎஸ்பி குணசேகரன், காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா், ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் இணைந்து தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT