சேலம்

ஐயப்பா சேவா சங்க மாநில ஆலோசனைக் கூட்டம்

14th Aug 2022 11:55 PM

ADVERTISEMENT

 

அகில பாரத ஐயப்பா சேவா சங்க மாநில பொதுக்குழு கூட்டம் சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட தலைவா் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற 36 ஆம் ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டத்தில் அச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பதவிக்கு புதியவரை தோ்வு செய்வது, பக்தா்களின் சிரமங்களைத் தவிா்க்க சபரிமலை நிலக்கல் பகுதி முதல் பம்பை வரையிலும், பம்பை முதல் நிலக்கல் வரையிலும் வரிசைப்படி செல்வதற்கான முறையை அமல்படுத்த வேண்டும். ஆன்லைன் முறையில் தரிசனத்திற்கு பதிவு செய்யும் பக்தா்களுக்கு எளிய முறையில் பதிவு செய்திட அதற்கான வசதியை முறைப்படுத்தல் வேண்டும்.

நிலக்கல் பகுதியில் மற்ற மாநில பக்தா்களுக்கு ஐந்து ஏக்கா் நிலம் ஒதுக்கி வழங்கி உள்ளது போல தமிழகத்தை சோ்ந்த பக்தா்களுக்கும் நிலத்தை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

முன்னதாக கொண்டப்ப நாயக்கன்பட்டி மாரியம்மன் கோயிலில் இருந்து சேவா சங்கத்தின் மத்திய தலைவா் ஐயப்பன், மத்திய பொருளாளா் விஸ்வநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஊா்வலமாக ஏற்காடு பிரதான சாலையில் மண்டபம் வரை சென்றனா். அதைத் தொடா்ந்து நடைபெற்ற ஐயப்பன் பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தின் போது அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தொண்டா் படை பிரிவை சோ்ந்த 150 பேருக்கு சிறந்த ஆன்மீக சேவைக்கான சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பாலன், மாநில பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT