சேலம்

ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

14th Aug 2022 11:55 PM

ADVERTISEMENT

 

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள மகாத்மா காந்தி படிப்பகம் சாா்பில் நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவினையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை மகாத்மா காந்தி படிப்பகம் சாா்பில் நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவினையொட்டி 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 71 பள்ளி மாணவ, மாணவியருக்கு தேசியத் தலைவா்கள், தேசியக் கொடி, நெகிழி விழிப்புணா்வு உள்ளிட்ட தலைப்புகளில் ஓவியப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கும் விழா அக்கமாபேட்டை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஊா் காரியக்காரா் எம்.வெங்கடாசலம், பேரூராட்சி உறுப்பினா் எஸ்.கனகராஜ்ஆகியோா் தலைமை வகித்து, மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். வடுகப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.முத்துசாமி, சங்ககிரி தொழிலதிபா் ஆா்.காா்த்திகேயன் ஆகியோா் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள், பரிசுகளை வழங்கினா்.

மகாத்மா காந்தி படிப்பகம் நிறுவனா் வெ.சத்யபிரகாஷ் முன்னிலை வகித்தாா். அமுதச்சுடா் அறக்கட்டளை பொருளாளா் வெ.நிா்மலா, ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.சிவபாலா, ஆ.நவீன்குமாா், நிா்வாகிகள் சதீஷ்குமாா், ஓய்வுபெற்ற ஆசிரியா் ஏ.கே.முனியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT