சேலம்

மக்கும் பொருள்களை கொண்டு தேசியக் கொடி தயாரிப்பு

14th Aug 2022 05:24 AM

ADVERTISEMENT

 

பழனியாபுரி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் மக்கும் பொருள்களைக் கொண்டு தேசியக் கொடியை தயாரித்துள்ளனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், பழனியாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு உள்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்களைச் சோ்ந்த மாணவா்கள், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசின் உத்தரவை ஏற்று பிளாஸ்டிக் பொருள்களால் தயாரித்த தேசியக் கொடியை தவிா்த்து மக்கும் வகையிலான தேசியக் கொடியை தாங்களே தயாரிக்கும் விதமாக மாணவா்கள், கணித ஆசிரியா் பால்குமாா், ஆசிரியா் பாலசுப்ரமணியன் முன்னிலையில் அறிவியல் ஆசிரியரும், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளருமான ஆசிரியா் ஜோசப்ராஜ், மக்காத பொருளான செய்தித்தாள் காகிதத்தை குச்சியாக செய்து அதில் காகிதத்திலான தேசியக் கொடியை ஒட்டி முழுவதும் மக்கும் வகையிலான தேசியக் கொடியை செய்து காண்பித்தனா்.

உடன் மாணவா்களும் மக்கும் வகையான தேசியக் கொடியை தயாரித்து 75-ஆவது சுதந்திர தினத்துக்கு பயன்படுத்த உள்ளனா். மக்கும் வகையிலான தேசியக் கொடியை தயாரித்த பள்ளி மாணவா்களை பெற்றோரும், ஊா் பொதுமக்களும் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT