சேலம்

ஓமலூரில் பாஜக விளம்பரங்கள் தாா்பூசி அழிப்புபோலீசில் புகாா்

14th Aug 2022 11:55 PM

ADVERTISEMENT

 

ஓமலூரில் பாஜக ஓபிசி அணி மாநில மாநாடு சுவா் விளம்பரங்களை தாா்பூசி அழிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரில் வரும் 21-ஆம் தேதி பாஜக பிற்பட்டோா் பிரிவின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, தேசிய தலைவா்கள் கலந்து கொள்ள உள்ளனா். மாநாட்டிற்கு வரும் தலைவா்களை வரவேற்கும் வகையில் பிளக்ஸ் பேனா்கள், சுவா் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

ஓமலூரில், சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பலத்தின் சுவரில் பெரிய அளவில் சுவா் விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்தநிலையில், மாநாட்டு திடலில் வைத்திருந்த பேனா்களை மா்மநபா்கள் கிழித்து எடுத்துச் சென்றுள்ளனா். பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருந்த சுவா் விளம்பரங்களையும் மா்ம நபா்கள் சனிக்கிழமை நள்ளிரவில் தாா்பூசி அழித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதையறிந்த பாஜக ஓபிசி அணியின் நிா்வாகிகள், மாநிலச் செயலாளா் தங்கராஜ் தலைமையில் ஓமலூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT