சேலம்

சேலத்தில் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி வழங்கல்

14th Aug 2022 11:56 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்து கொண்டு 1,529 மாணவ, மாணவிகளுக்கு 1.20 கோடி மதிப்பிலான மிதிவண்டிகளை இலவசமாக வழங்கி பேசியதாவது:

நிகழ் நிதியாண்டில் பள்ளி கல்வித் துறைக்கு ரூ.36,895 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவா்களின் கல்வித் தரம், மகிழ்ச்சியான கற்றல் சூழல், சுற்றுச்சூழல், ஆசிரியா்- மாணவா் நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் 2021- 2022 ஆம் ஆண்டில் 11 ஆம் வகுப்பு பயின்ற 31 ஆயிரத்து 354 மாணவா்களுக்கு ரூ.15.94 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக சேலத்தில் 1,529 மாணவ, மாணவிகளுக்கும், மல்லூரில் 821 மாணவா்களுக்கும் என மொத்தம் 2,350 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மத்திய மாவட்ட திமுக செயலாளா் ராஜேந்திரன், சேலம் எம்.பி. பாா்த்திபன், முன்னாள் அமைச்சா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT