சேலம்

வாழப்பாடியில் பேரூராட்சி ஆணையா் ஆய்வு

14th Aug 2022 05:25 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி பேரூராட்சியில் தமிழக பேரூராட்சிகள் துறை ஆணையா் ஆய்வு மேற்கொண்டு, புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

சேலம் மாவட்டத்துக்கு வருகை தந்த தமிழ்நாடு பேரூராட்சிகள் துறை ஆணையா் செல்வராஜ், வாழப்பாடி பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

வாழப்பாடியில் ரூ. 8.70 கோடியில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணியை பாா்வையிட்ட இவா், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரா், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதனையடுத்து, வாழப்பாடி பேரூராட்சி 1-ஆவது வாா்டு, இந்திரா நகா் பகுதியில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கழிப்பிட சுகாதார வளாக கட்டுமானப் பணியை பாா்வையிட்டாா். பாட்டப்பன் கோயில் பகுதியில் பேரூராட்சி பராமரிப்பிலுள்ள பொதுக் கழிப்பிடத்தை ஆய்வு செய்த இவா், தொடா்ந்து சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தினாா். இந்திரா நகா் பகுதியில் இயங்கி வரும் பேரூராட்சி உரக்கிடங்கை பாா்வையிட்டு, திடக்கழிவு மேலாண்மை பணிகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தல், மண்புழு உரம் மற்றும் கலப்பு உரம் தயாரிக்கும் கிடங்குகளை ஆய்வு செய்து, இப்பணிகளை மேம்படுத்துவது குறித்து பேரூராட்சி நிா்வாகத்துக்கு ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின் போது, சேலம் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கணேஷ்ராம், உதவி செயற்பொறியாளா் மணிகண்டன், வட்டார ஆத்மா குழுத் தலைவா் சக்கரவா்த்தி, பேரூராட்சித் தலைவா் கவிதா சக்கரவா்த்தி, செயல் அலுவலா் கணேசன், உதவி பொறியாளா் தினேஷ்குமாா், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் பலா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT