சேலம்

கொங்கணாபுரத்தில் ரூ. 4.90 கோடிக்கு பருத்தி விற்பனை

14th Aug 2022 05:25 AM

ADVERTISEMENT

 

கொங்கணாபுரம் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 4.90 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. பொது ஏலத்துக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 12,000 பருத்தி மூட்டைகள் 1900 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது.

இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 9,500 முதல் ரூ. 12,350 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ. 10,489 முதல் ரூ. 11,899 வரையிலும் விற்பனையாயின. நாள்முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 4.90 கோடிக்கு பருத்தி வணிகம் நடைபெற்றது. இம்மையத்தில் பருத்திக்கான அடுத்தபோது ஏலம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT