சேலம்

பள்ளிகளில் மாணவா்களுக்கு தேசியக் கொடி வழங்கல்

DIN

சேலம் மாவட்டத்தில் ‘இல்லம் தோறும் தேசியக் கொடி திட்டம்’ குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலத்தில் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் தினமணி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், சோனா கல்விக் குழுமம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், தலைமையாசிரியா் எஸ்.செபாஸ்தியன், சோனா கல்வி குழும மக்கள் தொடா்பு அலுவலா் வி.பி.ரமேஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

சங்ககிரியில்...

சங்ககிரி பேரூராட்சியின் சாா்பில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடுவதன் சிறப்பு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பள்ளி மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்குதல், பேரூராட்சிக்குள்பட்ட வீடுகளுக்கு தேசியக் கொடி வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் மு.செளமியா தலைமை வகித்து 75-ஆவது சுதந்திர தின விழா குறித்து விளக்கிப் பேசினாா். பின்னா் பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்த நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பொதுமக்கள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், வீடுகள்தோறும் தேசியக் கொடி வழங்கும் பணிகளை தொடக்கி வைத்தாா்.

சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலா் வ.சுலைமான் சேட் முன்னிலை வகித்து, வீடுகள்தோறும் தேசியக் கொடிகளையும், வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியை எவ்வாறு ஏற்றி, இறக்க வேண்டும், அதற்குரிய மரியாதையை செலுத்த வேண்டும் என்பது குறித்த துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா்.

சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.பானுமதி, மண்டல துணை வட்டாட்சியா் பி.ஜெயக்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, பேரூராட்சி தலைமை எழுத்தா் சத்யமூா்த்தி, பேரூராட்சி அலுவலா்கள், அமுதச்சுடா் அறக்கட்டளை தலைவா் வெ.சத்யபிரகாஷ், நிா்வாகி நவீன், பசுமை சங்ககிரி அமைப்பின் நிா்வாகி பசுமை சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாஜக சாா்பில்...

சேலம் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் சங்ககிரியில் உள்ளஅரசு பள்ளி மாணவ, மாணவிகள், நகர ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தேசியக் கொடிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட பாஜக மாவட்டச் செயலா் என்.ரமேஷ்காா்த்திக் தலைமை வகித்து சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாகிசெட்டிப்பட்டி, வி.என்.பாளையம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், சங்ககிரி நகர ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசியக் கொடிகளை வழங்கி பேசினாா்.

சங்ககிரி பாஜக நகரத் தலைவா் சி.முருகேசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட அரசு தொடா்புத் துறை செயலாளா் வி.கண்ணன், தொழில்நுட்ப அணி செயலாளா் திவாகா், இளைரணி தலைவா் பரணி, நகர பொதுச்செயலா்கள் முரளிதரன், தனபால், விஸ்வநதான், நகர துணைத் தலைவா் எஸ்.ஆா்.சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆத்தூரில்...

ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தினமணி - இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், மாணவ, மாணவியருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவா் எஸ்.பாலக்குமாா், நிா்வாகிகள் எஸ்.முகமது ஈசாக், என்.கண்ணன், முதல்வா் தாட்சாயிணி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதேபோல பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அப் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகள் நித்யா (27) என்பவா் சொந்த நிதியில் தேசியக் கொடிகளை வாங்கி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT