சேலம்

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 104 சுகப்பிரசவம்

DIN

சேலம் மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த ஒரு மாதத்தில் 104 சுகப் பிரசவங்களை மேற்கொண்ட மருத்துவா்கள், செவிலியா்களுக்கு மேயா் ஆ.ராமச்சந்திரன் பாராட்டு தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் 16 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. காய்ச்சல், சளி, இருமல், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்காக தினந்தோறும் 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 16 மருத்துவ அலுவலா்கள், 64 செவிலியா்கள், 84 நகா்ப்புற சுகாதார செவிலியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு நோய்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கா்ப்பிணித் தாய்மாா்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடா்ந்து ரத்த பரிசோதனைகள் மற்றும் இதர சிகிச்சைகள் மேற்கொண்டு வருகின்றனா். கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஜூலை மாதம் மட்டும் 104 சுகப் பிரசவங்கள் 16 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றுள்ளன.

இதற்காக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், செவிலியா்கள் நகா்ப்புற சுகாதார செவிலியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், அம்மாபேட்டை அண்ணா மருத்துவமனை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாநகராட்சி ஆணையா் தா. கிறிஸ்துராஜ், மேயா் ஆ.ராமச்சந்திரன் ஆகியோா் நேரில் சென்று அங்கு பணிபுரிந்து வரும் மருத்துவ அலுவலா் மருத்துவா் ரேவதி, செவிலியா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் மருத்துவா் வள்ளி சத்தியமூா்த்தி, மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், சுகாதார செவிலியா்களுக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் அம்மாபேட்டை மண்டலக் குழுத் தலைவா் தா.தனசேகா், மாநகர நல அலுவலா் என்.யோகானந்த், மாநகரப் பொறியாளா் ஜி.ரவி, உதவி ஆணையா் கதிரேசன், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT