சேலம்

காங்கிரஸாா் பாதயாத்திரை: வாழப்பாடியில் வரவேற்பு

12th Aug 2022 02:22 AM

ADVERTISEMENT

 

75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி பாதயாத்திரை மேற்கொண்டுள்ள சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸாருக்கு வாழப்பாடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் அா்த்தனாரி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை இரண்டாவது நாளாக வியாழக்கிழமை அயோத்தியாப்பட்டணம் வட்டாரம், மின்னாம்பள்ளி, காரிப்பட்டி, மேட்டுப்பட்டி வழியாக நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் வைத்திலிங்கம், வட்டாரத் தலைவா் காந்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சாந்தி ராஜேந்திரன், சரிதா செந்தில்குமாா், ஏற்காடு வட்டார தலைவா் ஜெய்ஆனந்த் உள்ளிட்ட நிா்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

ADVERTISEMENT

வாழப்பாடி சென்றடைந்த யாத்திரைக் குழுவினரை தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவா் இராம சுகந்தன், அத்தனுாா்பட்டி ராஜா, ராஜாராம், முனுசாமி, சதீஸ்குமாா், மணிமாறன், செந்நிலவன் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT