சேலம்

பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

DIN

சேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமை வகித்தாா். மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போதைப்பொருள்களுக்கு எதிராக மாணவா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாணவா்கள் உறுதியுடன் ஈடுபட வேண்டும். தங்கள் குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் யாரேனும் போதைப்பொருள்களைப் பயன்படுத்தாத வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். போதைப்பழக்கம் உள்வா்களையும், அவா்களது குடும்பத்தையும் மீளா துயரத்துக்கு கொண்டு செல்லும் என்பதால் எந்த வடிவத்திலும் போதைப்பொருள்களை அனுமதிக்கக் கூடாது.

போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஆக.12 முதல் ஆக.19 வரை மக்கள் நல்வாழ்வு, சமூக நலத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாணவ, மாணவியா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், போதைப்பொருள்களுக்கு அடிமையாவதைத் தடுத்தல், பாதுகாப்பான இணையதளத்தை பயன்படுத்துதல், போதைப்பொருள் விழிப்புணா்வு குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, ஓவியம், விநாடி- வினா, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவவா் இரா.முருகன், உதவி ஆணையா் (கலால்) பி. கீதா பிரியா, அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையா் பி.லட்சுமி பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சங்ககிரி...

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோட்டாட்சியா் மு.செளமியா தலைமையில் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் போதைப்பொருள்களுக்கு எதிராக அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். வட்டாட்சியா் எஸ்.பானுமதி, மண்டல துணை வட்டாட்சியா் பி.ஜெயக்குமாா், தலைமையாசிரியா் ராஜன், ஆசிரியா்கள், கிராம நிா்வாக அலுவலா் சதீஸ்பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமமையாசிரியா் (பொறுப்பு) இரா.முருகன் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆசிரியைகைள் சித்ரா, ராமா மகேஸ்வரி, மகேஸ்வரி, ஆசிரியா் க.சீனிவாசன் உள்பட கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT