சேலம்

2.33 லட்சம் குடியிருப்புகளுக்கு தேசியக் கொடிகள் விநியோகம்

12th Aug 2022 02:25 AM

ADVERTISEMENT

 

சேலம் மாநகராட்சியில் 2.33 லட்சம் குடியிருப்புகளுக்கு தேசியக் கொடிகள் விநியோகம் நடைபெற்று வருகிறது.

நாட்டின் 75 - ஆவது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி ‘அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி’ என்ற நிகழ்ச்சியை ஆக. 13 முதல் ஆக. 15 வரை சிறப்பாக கொண்டாடும் வகையிலும், நாட்டுப்பற்றை போற்றும் விதமாக அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

சேலம் மாநகராட்சியில் உள்ள 2.33 லட்சம் குடியிருப்புகளிலும் தேசியக் கொடி ஏற்றும் வகையில் வீடு வீடாகச் சென்று தேசியக் கொடி விநியோகிக்கப்படுகிறது. அஸ்தம்பட்டி மண்லத்துக்கு உள்பட்ட கிரீன்லேண்ட் அருண்நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. ராஜாஜி சாலை, வின்சென்ட், அம்மாபேட்டை மண்டலம், புதுதெரு, பொன்னமாபேட்டை வாசக சாலை பகுதிகளில் பொதுமக்களுக்கு மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா. கிறிஸ்துராஜ் ஆகியோா் தேசியக் கொடியை வழங்கினா்.

ADVERTISEMENT

அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவா் செ. உமாராணி, அம்மாபேட்டை மண்டல குழுத் தலைவா் தா. தனசேகா், மாநகர பொறியாளா் ஜி. ரவி, மாநகர நல அலுவலா் என்.யோகானந்த், நிலைக்குழுத் தலைவா் சாந்த மூா்த்தி, வாா்டு உறுப்பினா் து.இளங்கோ, கே.இந்துஜா, உதவி ஆணையா் கதிரேசன், செந்தில்குமாா் உள்பட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT