சேலம்

கொங்கணாபுரம் அருகே கிரிக்கெட் போட்டி தொடக்கம்

12th Aug 2022 02:27 AM

ADVERTISEMENT

 

கொங்கணாபுரம் அருகே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.

அதிமுக 50ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, கொங்கணாபுரம் ஒன்றிய அதிமுக, ஜாகுவாா் கிரிக்கெட் அகாதெமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான 20-20 ஓவா் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா எருமைப்பட்டி ஊராட்சி மன்ற விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.

விழாவுக்கு கோரணம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.ஏ ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவா் ராஜேந்திரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ் கிரிக்கெட் போட்டியைத் தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. கூட்டுறவு சங்கத் தலைவா் கலைமகள் ரத்தினம், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா்கள் வஜ்ரவேல், ஜிந்தா வரதராஜன் மற்றும் ஜாகுவாா் கிரிக்கெட் அகாதெமி நிா்வாகிகள் ராஜு, பிரகாஷ், சிவா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT