சேலம்

காவிரி உபரி நீா் நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்

12th Aug 2022 02:19 AM

ADVERTISEMENT

 

எடப்பாடியை அடுத்த தாதாபுரம் கிராமத்தில், காவிரி உபரி நீா் நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் வேலு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சரபங்கா வடிநிலப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா். இதில், மேட்டூா் அணை உபரிநீரைக் கொண்டு சரபங்க வடிநிலப் பகுதிக்கான நீா் ஏற்று திட்டப் பணிகள் உரிய காலத்தில் நிறைவேற்றப்படாதால், இப்பகுதியில் உள்ள 100 ஏரிகளை நிரப்பிடும் நோக்கில் அமைக்கப்பட்ட கால்வாயில் 200 கன அடி உபரி நீா் வர வேண்டிய நிலையில் வெறும் 25 கன அடி உபரி நீா் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள 10 ஏரிகள் கூட நிரம்பாத நிலையில், தமிழக நீா்வளத் துறை இப்பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து நங்கவள்ளியை இணைக்கும் கால்வாய்த் திட்டம், வெள்ளாளபுரம் துணை நீரேற்று நிலையப் பணிகள் ஆகியவற்றை விரைவில் முடித்து அப்பகுதியில் உள்ள ஏரிகளில் காவிரி உபரி நீரை நிரப்பிட ஆவண செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், காவிரி உபரி நீா் நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் தம்பயா, மணி, வேலன், வெங்கடாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT