சேலம்

பேச்சு போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

12th Aug 2022 11:08 PM

ADVERTISEMENT

சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் சாா்பில், 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் சாா்பில், 75-ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு இந்திய தாய்த்திருநாட்டை நேசி, சேவை செய் என்ற தலைப்பில் 35 பள்ளிகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. பள்ளி அளவில் முதல், இரண்டாம் பரிசு பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சேலம், மரவனேரி பாரதி வித்யாலய மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், மாவட்ட கல்வி அலுவலா் எம்.ஏ.உதயகுமாா் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 80 மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினாா். இதில், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம செயலாளா் யதாத்மானந்தா், பாரதி வித்யாலய சங்கத்தின் தலைவா் ஆடிட்டா் சீனி.துரைசாமி, செயலாளா் சி.ஏ.அசோக் துரைசாமி, துணைத் தலைவா் என்.சுரேஷ், பள்ளித் தலைமையாசிரியா் ஏ.சாந்தி ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT