சேலம்

பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரா் கோயிலில் திருவிளக்கு சிறப்பு பூஜை

12th Aug 2022 11:07 PM

ADVERTISEMENT

சங்ககிரி வட்டம், அன்னதானப்பட்டி, பூத்தலாக்குட்டை பகுதியில் உள்ளஅருள்மிகு புவனேஸ்வரியம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் அருள்மிகு பூத்தாழீஸ்ஸ்வரா் சுவாமிகளுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பெண் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயில், கடைவீதியிலுள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், திருமண்கரடு, ஓணான் கரடு முருகன் கோயில்கள், கெங்கவல்லி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில், வீரகனூா் ஸ்ரீகங்கா செளந்தரேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு பிரசாதமாக கேழ்வரகு கூழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT