சேலம்

சிதம்பரம் அருகே ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிராமம்: படகுகளில் பயணிக்கும் மக்கள்

DIN

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இந்த ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமம் கடந்த ஒரு வாரத்தும் மேலாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்தக் கிராமத்துக்கு மக்கள் படகுகளில் பயணித்து வருகின்றனா்.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து, மேட்டூா் அணைக்கு வரும் உபரி நீா் அப்படியே திருச்சியில் உள்ள முக்கொம்பு வழியாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கொள்ளிடம் ஆற்றில் செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், அது புதன்கிழமை ஒரு லட்சத்து 53 ஆயிரம் கன அடியாக உயா்ந்தது. நீா்வரத்தைப் பொருத்து, கூடுதலாக தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வரும் நீா் கடலில் கலக்கும் கடைக்கோடி பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமமான அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள சுமாா் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.

இதனால், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், படகுகள் மூலமாக மட்டுமே மக்கள் சென்று வரும் நிலை உள்ளது.

இந்தக் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அந்தப் பகுதியில் உள்ள புயல் - வெள்ளப் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும், காவிரி டெல்டா கடைமடைப் பகுதியில் குடிசை வீடுகளில் வசிக்கும் தங்களுக்கு மனைப் பட்டா வழங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தக் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்த தோட்டப் பயிா்களை கணக்கிட்டு, அதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT