சேலம்

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா்த் திறப்பு அதிகரிப்பு

11th Aug 2022 12:47 AM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையிலிருந்து புதன்கிழமை நொடிக்கு 1,40,000 கன அடியாக தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணைக்கு வரும் 1,40,000 கன அடி தண்ணீரை நீா்மின் நிலையங்கள் வழியாக 23,000 கன அடியும், உபரிநீா்ப் போக்கிகள் வழியாக 1,17,000 கன அடியும் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது.

25 ஆவது நாளாக புதன்கிழமையும் அணையின் நீா்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. நீா் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. ஜூன் 12-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை அணைக்கு 210 டிஎம்சி தண்ணீா் வந்துள்ளது. 150 டிஎம்சி நீா் அணையிலிருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT