சேலம்

சுதந்திரப் போராட்ட வீரா்கள் ஓவியக் கண்காட்சி

11th Aug 2022 01:04 AM

ADVERTISEMENT

 

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை போற்றும் வகையில், கடலூா் அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட 75 வீரா்களின் ஓவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

சவகா் சிறுவா் மன்ற ஓவிய ஆசிரியா் சு.மனோகரன் பென்சிலால் வரைந்த 75 ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. தொடக்க விழாவுக்கு உலக திருக்கு பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் சு.பாப்பாத்தி கண்காட்சியை ஓவியக் கண்காட்சியை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்க பொதுச் செயலா் மு.மருதவாணன் வாழ்த்திப் பேசினாா். இந்தக் கண்காட்சி வருகிற 20-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் செ.ஜெயரத்னா வரவேற்க, அலுவலா் ம.விஜயா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT